கொலை செய்யப்பட்டவர் பிரபல ரவுடி


கொலை செய்யப்பட்டவர் பிரபல ரவுடி
x

நாகர்கோவில் அருகே கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டவர் பிரபல ரவுடி என்று அடையாளம் தெரிந்தது. இந்த கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

நாகர்கோவில் அருகே கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டவர் பிரபல ரவுடி என்று அடையாளம் தெரிந்தது. இந்த கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

கழுத்தை அறுத்து கொலை

நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் புதிதாக நான்கு வழிச்சாலை பணி நடந்து வருகிறது. அதன் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் வாலிபர்கள் மது வாங்கி, நான்கு வழிச்சாலைக்கு வந்து குடிப்பது வழக்கம்.

அதே போல் நேற்று முன்தினம் இரவு 3 பேர் மது வாங்கி வந்து குடித்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு நடந்தது. இதில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். அப்போது அங்கிருந்து 2 பேர் தப்பி ஓட முயன்றனர். அங்கிருந்தவர்கள் அவர்களை துரத்தி சென்றனர். அப்போது ஒருவர் பிடிபட்டார். இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் இரணியல் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பிரபல ரவுடி

அப்போது பிடிபட்டவர் குருந்தன்கோட்டை அடுத்த முக்கலம்பாட்டை சேர்ந்த அசோக் (வயது 25) என்பதும், தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்த அஜின் ஜோஸ் என்பதும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து கொலையில் துப்பு துலக்க துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அதில் கொலை செய்யப்பட்டவர் களியக்காவிளை ஆர்.சி. தெருவை சேர்ந்த மணியின் மகன் ரீகன் (35) என்றும், பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும், கஞ்சா வியாபாரம் செய்ததும் தெரிய வந்தது.

சிறையில் பழக்கம்

ரீகன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது ஒருவருடன் நண்பராக பழகியதாகவும், அவர் மூலம் அஜின் ஜோஸ் நட்பு கிடைத்ததாகவும் தெரிய வந்தது. ரீகன் 4 தினங்களுக்கு முன்பு தான் சிறையில் இ்ருந்து வெளியே வந்துள்ளார். அதன்பிறகு ரீகனுடன், அஜின் ஜோஸ் பேசி வந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரீகனை தோட்டியோடுக்கு வா என்று அஜின் ஜோஸ் அழைத்துள்ளார். உடனே ரீகன் ஆட்டோவில் ஏறி வந்துள்ளார்்.

பின்னர் ரீகன், அஜின் ஜோஸ் மற்றும் அவர் நண்பர் அசோக் ஆகியோர் மது அருந்த சென்றனர். மது அருந்திக்கொண்டு இருந்த போது மது போதையில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ரீகன் கீழே விழுந்தார். உடனே அவரை அஜின் ஜோஸ் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததும் தெரிய வந்தது.

2 பேர் கைது

இந்த கொலை தொடர்பாக அசோக் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அஜின் ஜோஸ் குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டியிடம் சரண் அடைந்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போது, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததாக இருவரும் கூறி உள்ளனர்.


Next Story