முதியவர் மர்ம சாவு


முதியவர் மர்ம சாவு
x

ஆரல்வாய்மொழியில் முதியவர் மர்ம சாவு மகனிடம் போலீசார் தீவிர விசாரணை

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி வில்லவிளையை சேர்ந்தவர் பூதலிங்க ஆசாரி (வயது85). இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பூதலிங்க ஆசாரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்து படுக்கையில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை 6 மணிக்கு அவர் திடீரென இறந்தார்.

இதுகுறித்து மூத்தமகன் வேலாயுதம் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது தந்தையிடம் எனது தம்பி சுப்பையா தகராறு செய்துள்ளார். பின்னர் நான் அவரை எனது வீட்டுக்கு அழைத்து சென்று படுக்க வைத்தேன். பின்னர் மாலையில் திடீரென இறந்து விட்டார். எனது தந்தையின் சாவில் சந்தேகம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதனையடுத்து பூதலிங்க ஆசாரியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மகன் சுப்பையாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்புதான் சாவுக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story