பசு மாட்டை வெட்டிய மர்ம நபர்
கடையம் அருகே பசு மாட்டை வெட்டிய மர்ம நபர்
தென்காசி
கடையம்:
கடையம் அருகே உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மார்க் மெஞ்ஞானம் என்பவருடைய மகன் ஜேக்கப் சாமுவேல். இவர் கோழிப்பண்ணையும் மற்றும் இரண்டு மாடுகளை வைத்தும் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது ஒரு பசு மாட்டை காணவில்லை. பல இடங்களில் தேடியும் மாட்டை கண்டுபிடிக்கவில்லை இந்நிலையில் நேற்று காலை காணாமல் போன பசு மாட்டின் குதிங்கால் வெட்டப்பட்டு ரத்தம் ஒழுக வீட்டிற்கு வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜேக்கப் சாமுவேல், இதுபற்றி கடையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பசுமாடு வெட்டப்பட்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story