மாயமான தொழிலாளி, குளத்தில் பிணமாக கிடந்தார்
திருமருகல் அருகே மாயமான தொழிலாளி, குளத்தில் பிணமாக கிடந்தார். இதுெதாடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டச்சேரி:
திருமருகல் அருகே மாயமான தொழிலாளி, குளத்தில் பிணமாக கிடந்தார். இதுெதாடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி மாயம்
திருமருகல் ஒன்றியம் மாதிரிமங்கலம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 48) கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி விமலா.
கடந்த மாதம் 28-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பாஸ்கரன் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது மனைவி விமலா பல்வேறு இடங்களில் தேடியும், அவர்கிடைக்கவில்லை.
குளத்தில் பிணமாக கிடந்தார்
இந்த நிலையில் ஏனங்குடி ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் உள்ள சத்திரம் குளத்தில் பாஸ்கரன் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள், திருக்கண்ணப்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பாஸ்கரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரன் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரு காரணமாக? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.