குறுகலான சாலையை அகலப்படுத்தி தர வேண்டும்


குறுகலான சாலையை அகலப்படுத்தி தர வேண்டும்
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே பள்ளத்தில் பஸ் சாய்ந்தது. இதனால் குறுகலான சாலையை அகலப்படுத்தி தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே பள்ளத்தில் பஸ் சாய்ந்தது. இதனால் குறுகலான சாலையை அகலப்படுத்தி தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுகலான சாலை

கூத்தாநல்லூர் அருகே உள்ள ஊட்டியாணியில் இருந்து புள்ளமங்கலம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், லாரி, டிராக்டர், கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.

மேலும் இந்த சாலை திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடம் ஆகும். இதனால் புள்ளமங்கலம், சேந்தங்குடி, விக்ரபாண்டியம், கோட்டூர், வடபாதிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட சாலை பல ஆண்டுகளாக மிகவும் குறுகலான சாலையாகவே இருந்து வருகிறது.

சேறும், சகதியுமாக...

இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் குறுகலான இந்த சாலை பாதியளவு மண் சாலையாக இருப்பதால், மழை காலங்களில் சாலையின் ஓரம் உள்ள மண் சாலை சேரும் சகதியுமாக மாறுவதுடன், பள்ளமும் ஏற்படுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் வரும்போது இந்த பள்ளத்தில் சாய்ந்து விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் வாகனங்களில் வருவோர் இந்த பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர்.

இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.எனவே, ஊட்டியாணி தொடங்கி, பாலக்குறிச்சி பிரிவு சாலை புள்ளமங்கலம் வரை உள்ள குறுகலான சாலையை அகலப்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story