நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றும்


நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றும்
x

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.

புதுக்கோட்டை

அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

அ.தி.மு.க. ஒன்றிணைய வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி சொல்லி வருகிறார். அவரோடு முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள் சிலர் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஒத்துவரவில்லை என்றால் தனிமைப்படுத்தப்படுவார். இது கூடிய சீக்கிரத்தில் நடக்கும். கோவை செல்வராஜிக்கு தலைமை கழகத்தில் பதவி கொடுப்பதாக இருந்தோம்.

மாவட்ட செயலாளராக பதவி கொடுத்து 4 மாதங்களே ஆன நிலையில் செய்தி தொடர்பாளராக சென்னையில் இருந்ததால் பணியை கவனிக்க முடியவில்லை. அதனால் அதனை பிரித்து 4 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். அதைப்பார்த்து விலகுவதாக கோவை செல்வராஜ் தெரிவித்திருப்பது வருத்தமாக உள்ளது. அவரை அழைத்து பேசுவோம். கவர்னர் சட்ட விதிகளுக்குட்பட்டு செயல்படுகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தான். அவரது தலைமையில் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். தி.மு.க. எங்களை இயக்கவில்லை. அதற்கு நாங்கள் ஆட்படமாட்டோம். ஜெயலலிதா மறைவு தேதியை எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ள தேதி பற்றி பின்னர் தான் தெரியவரும். ஆணையத்தின் அறிக்கையை நாங்கள் பொய் என்று சொல்லவில்லை. ஆணைய அறிக்கையின் படி அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையில் தான் கூட்டணி இருக்கும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எங்களது கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான பொதுக்குழு விரைவில் நடைபெறும். தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story