நெல்லை-தாதர் ரெயில் போத்தனூரில் நின்று செல்லும்


நெல்லை-தாதர் ரெயில் போத்தனூரில் நின்று செல்லும்
x

நெல்லை-தாதர் ரெயில் போத்தனூரில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

நெல்லையில் இருந்து தாதருக்கு விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது வருகிற 19-ந் தேதி நெல்லையில் இருந்து தாதர் விரைவு ரெயில் கோவை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படாமல் இருகூர்-போத்தனூர் பாதையில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் அன்று மட்டும் போத்தனூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story