குருபரப்பள்ளி அருகே திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் திடீர் சாவு - உதவி கலெக்டர் விசாரணை


குருபரப்பள்ளி அருகே திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் திடீர் சாவு - உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 26 Jun 2023 1:15 AM IST (Updated: 26 Jun 2023 8:44 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சாமந்தமலை பக்கமுள்ள பெரிய குட்டூரை சேர்ந்தவர் சஞ்சய். இவரது மனைவி இளவரசி (வயது 19). கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த 1-ந் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் வலிப்பு நோயால் அவதிப்பட்ட இளவரசி இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். கடந்த 23-ந் தேதி வலிப்பு வரவே, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முனதினம் திடீரென இளவரசி இறந்தார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி ஒரு மாதத்தில் புதுப்பெண் இறந்துள்ளதால் இது குறித்து கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story