புதிய வெள்ளி ரதம் வெள்ளோட்டம்
புதிய வெள்ளி ரதம் வெள்ளோட்டம் நடைபெற்றது.
ஆவுடையார்கோவிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான யோகாம்பிகா சமேத ஆத்மநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 10-ம் நாள் வெள்ளிரதத்தில் மாணிக்கவாசகர் வீதி உலா வருவார். இதையடுத்து அந்த வெள்ளிரதம் பழுதடைந்ததால் புதியதாக வெள்ளிரதம் செய்யப்பட்டது. இதையடுத்து புதிய வெள்ளிரதம் வெள்ளோட்டம் நடைபெற்றது. முன்னதாக வெள்ளி குடங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் எடுத்து வந்து புதிய வெள்ளிரதத்தில் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதையடுத்து 24-வது குரு மகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரியார் வெள்ளிரத வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் தென்மண்டல மேற்பார்வையாளர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு வெள்ளிரதத்தை நான்கு வீதிகளிலும் இழுத்து வந்்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.