இரவு காவலாளி மயங்கி விழுந்து சாவு
நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலக இரவு காவலாளி மயங்கி விழுந்து இறந்தார்.
வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது 55). இவர் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரவு காவலாளியாக வேலைபார்த்து வந்தார். நேற்று முன் தினம் வழக்கம்போல் இரவு காவல் பணிக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று காலை பணி முடிந்து வீட்டுக்கு செல்ல நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்த பொதுமக்கள் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினர். ஆனால் அவர் திடீரென சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ரோஜா கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.