வந்தவாசியில் நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்

வந்தவாசியில் நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்
x

வந்தவாசியில் நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறறப்பட்டது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியில் நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறறப்பட்டது.

வந்தவாசியில் நகர மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் ஜலால் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் முன்னிலை வகித்தார். நகரில் மாடுகளால் இடையூறுகள் ஏற்படுகிறது. .ஒருசில நேரங்களில் மாடுகள் முட்டித் தள்ளி உயிரிழப்பு நேரிடுகிறது. மாடுகள் தொல்லையையும் நாய்களின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அனைத்து வார்டுகளிலும் சுகாதாரம் பேணிக்காக்க வேண்டும் என்றும் வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Next Story