ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது


ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
x

தொடர் மழை காரணமாக ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டு சுற்றுலா தலமாக விளங்குகிறது. பல்வேறு மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலைக்கு வந்து செல்கின்றனர். இங்கு படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, சாகச விளையாட்டுகள், செல்பிபார்க், பறவைகள் சரணாலயம், சுவாமிமலை ஏற்றம், தாமரைக் குளம், ஸ்ரீ கதவ நாச்சியம்மன், நிலாவூர் ஏரி, ஆகியவை உள்ளன.

வழக்கமாக விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது தொடர் மழையின் காரணமாக நேற்று ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இதனால் அனைத்து சுற்றுலா நிறுவனங்களிலும் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடியே காணப்பட்டது.


Next Story