முதியவர் பலி
சிவகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதல்; முதியவர் பலி
சிவகிரி:
சங்கரன்கோவில் தாலுகா சென்னிகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆவுடைதங்கம் (வயது 75). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் காலையில் சிவகிரி அருகே ரெட்டியபட்டியில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். சிவகிரி அருகே செந்தட்டியாபுரம் புதூர் அருகில் சென்றபோது, அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஆவுடைதங்கத்துக்கு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஆவுடைதங்கம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, லோடு ஆட்டோ டிரைவரான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வெங்கடேசுவரபுரத்தைச் சேர்ந்த ரவி மகன் மகாலிங்கத்திடம் (35) போலீசார் விசாரித்து வருகின்றனர்.