கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு
அச்சன்புதூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்.
கடையநல்லூர்:
தென்காசி ஐந்து வர்ணம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் (வயது 66). இவர் தற்போது குற்றாலம் அருகே உள்ள நன்னாகரம் இந்திரா நகரில் வசித்து வந்தார். இவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்திலும் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் நேற்று இலத்தூர்- அச்சன்புதூர் சாலையில் தனியார் கிணற்றில் முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக இலத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். கிணற்றில் கிடந்த உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், காணாமல் போன அப்துல் அஜீஸ் என்பதும், கிணற்றில் தவறி விழுந்ததும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.