முதியவர் 'திடீர்' சாவு


முதியவர் திடீர் சாவு
x

ஆம்பூர் பஸ் நிலையத்தில் முதியவர் ‘திடீர்’ என இறந்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மிட்டாளம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 60). இவர், நேற்று ஆம்பூர் பஸ் நிலையத்திற்கு வந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணிக்கத்தை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் உடலை போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story