முதியவர் விஷம் குடித்து சாவு
முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி
பேட்டை:
நெல்லையை அடுத்த தென்பத்து முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லபெருமாள் (வயது 75). இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனமுடைந்த நல்லபெருமாள் வீட்டில் யாரும் இல்லாத போது வயலுக்கு அடிக்கக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நல்லபெருமாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story