ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு


ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு
x
தினத்தந்தி 14 May 2023 12:15 AM IST (Updated: 14 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரம் அருகே ஆற்றில் மூழ்கி முதியவர் இறந்தார்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள செட்டிமேடு நடுத்தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 60). இவர் நேற்று ஆலடியூர் பலவேசக்கார சாமி கோவில் அருகே தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றாராம். அப்போது திடீரென நீரில் மூழ்கினார்.

தகவல் அறிந்ததும் அம்பை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். ஆற்றில் இறங்கி தேடி பேச்சிமுத்துவின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story