முதியவர் மயங்கி விழுந்து சாவு


முதியவர் மயங்கி விழுந்து சாவு
x

நெல்லை அருகே முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே பொன்னாக்குடி பாலம் அருகில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி விழுந்து கிடப்பதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர், முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் விரைந்து சென்று அந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story