போக்சோ வழக்கில் தேடப்பட்ட முதியவர் கைது


போக்சோ வழக்கில் தேடப்பட்ட முதியவர் கைது
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ வழக்கில் தேடப்பட்ட முதியவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

சேலம் ஆச்சாங்குட்டப்பட்டியை சேர்ந்தவர் அர்ச்சுணன் (வயது 65). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வீராணம் போலீசார் அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர் இதையடுத்து அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று முதியவர் அர்ச்சுணனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story