பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்


பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 15 Aug 2023 12:15 AM IST (Updated: 15 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; அரசுப்பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பேட்டி

நாகப்பட்டினம்


நாகையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சிவக்குமாருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். பின்னர் அரசு பணியாளர் சிறப்பு தலைவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) அரசு பணியாளர் சங்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இருசக்கர பிரசார பயணம் மேற்கொண்டு, பின்னர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அது எதிரொலிக்கும் என்றார்.


Next Story