பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரவை கூட்டம்
திருவாரூரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் பாலு தலைமை தாங்கினார். இணை செயலாளர் கமலநாதன், மாவட்ட பொருளாளர் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தணிக்கையாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். இதில் மாவட்ட கருவூல அலுவலர் முருகவேல், மாநில தலைவர் மாணிக்கம், பொதுச்செயலாளர் முத்துகுமாரவேலு, மாநில துணைத்தலைவர் ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மருத்துவப்படி
மத்திய அரசு வழங்குவது போல் மருத்துவ படியை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அரசு ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்.
வாரிசுகளுக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதியினை ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக வழங்கிட வேண்டும். பொங்கல் பரிசு தொகையை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.