பழமையான புளிய மரம் சாய்ந்தது


பழமையான புளிய மரம் சாய்ந்தது
x
தினத்தந்தி 29 March 2023 6:45 PM GMT (Updated: 29 March 2023 6:46 PM GMT)

குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தில் இருந்த பழமையான புளிய மரம் சாய்ந்தது.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தில் இருந்த பழமையான புளிய மரம் சாய்ந்தது.

புளிய மரம் சாய்ந்தது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஒரு புளிய மரம் இருந்தது. தாசில்தார் அலுவலகத்துக்கு பல்வேறு வேலைகளுக்காக வருபவர்கள் இந்த மரத்தின் நிழலில் தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்வது வழக்கம்.

நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் அந்த மரம் வேரோடு தாசில்தார் அலுவலக கட்டிடத்தின் மீது சாய்ந்தது. இதில் கட்டிடத்தின் மீது சிறிய கீறல்கள் விழுந்தது. மரம் விழுந்த நேரம் அதிகாலை என்பதால் அலுவலகத்தில் யாரும் இல்லை. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வெட்டி அகற்றினர்

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடததுக்கு வந்த தாசில்தார் சரவணன், மற்றும் ஊழியர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொதுப்பணித்துறை ஊழியர்கள் வேரோடு சாய்ந்த பழமை வாய்ந்த பெரிய புளிய மரத்தை எந்திரத்தின் மூலம் வெட்டி அகற்றி கொண்டு சென்றனர். தாசில்தார் அலுவலக வளாகத்தில் இருந்த பெரிய புளியமரம் சாய்ந்ததால் அந்த பகுதி நிழல் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றது.


Next Story