பழமையான மரம் வேரோடு சாய்ந்தது
செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது
மயிலாடுதுறை
பொறையாறு:
மயிலாடுதுறை மாவட்டத்தில நேற்றுமுன்தினம் இரவு தொடங்கி கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் 105 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக நேற்று மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக செம்பனார்கோவில் போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. தகவல் அறிந்த, மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையிலான 10 தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தை அகற்றினர். அப்போது, அப்பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து மற்றும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story