மூதாட்டியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று மிரட்டி நகை பறிப்பு
நாட்டறம்பள்ளி அருகே மூதாட்டியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று மிரட்டி நகையை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாட்டறம்பள்ளி அருகே மூதாட்டியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று மிரட்டி நகையை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில்
நாட்டறம்பள்ளியை அடுத்த பணியாண்டபள்ளி அருகே உள்ள வாலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 60). இவர் நேற்று மதியம் வெலக்கல்நத்தம் பகுதியில் நடைபெற்ற உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார். அதன் பிறகு வீடு திரும்ப திருமணம் மண்டபத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர், ெஜயலட்சுமியிடம் சென்று அவரை ஊரில் விட்டு விடுவதாக கூறி அழைத்துள்ளார். அதை நம்பிய ஜெயலட்சுமி அந்த நபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். நாட்டறம்பள்ளி அருகே சுண்ணாம்பு குட்டை பகுதியில் சென்றபோது ஆளில்லாத இடத்தில் மோட்டார் சைக்கிள் நிறுத்தி உள்ளார்.
மிரட்டி நகை பறிப்பு
ஜெயலட்சுமியை மிரட்டி அருகில் உள்ள நிலத்தில் கிழே தள்ளி அவர் காதில் அணிந்து இருந்த கம்மல் மற்றும் தாலி உள்ளிட்ட 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றார். இதனால் மூதாட்டி கூச்சல் போட்டார். பின்னர் இதில் காயம் அடைந்த அவரை அங்கிருந்த பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து மூதாட்டி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து நகைய பறித்து சென்ற நபர் குறித்து அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.