விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மூக்கில் ரத்தம் சொட்ட, சொட்ட வந்த மூதாட்டியால் பரபரப்பு


விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு    மூக்கில் ரத்தம் சொட்ட, சொட்ட வந்த மூதாட்டியால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மூக்கில் ரத்தம் சொட்ட, சொட்ட வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்


விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்தவர் கண்ணம்மாள் (வயது 80). இவர் நேற்று காலை மூக்கில் ரத்தம் சொட்ட, சொட்ட விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர், தனது மகன் தன்னை ரத்தம் வரும் அளவிற்கு தாக்கிவிட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் கூறினார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கண்ணம்மாள், சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story