நாகர்கோவிலில் தீக்குளித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு
நாகர்கோவிலில் தீக்குளித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் தீக்குளித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மூதாட்டி சாவு
நாகர்கோவில் இடலாக்குடி பரசுராமன் பெருந்தெருவை சேர்ந்த ராமசாமி மனைவி மாதுரு தேவி (வயது 68). கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ராமசாமி இறந்து போனார். இதனால் மாதுரு தேவி தனது மகன் பெருமாளின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாதுரு தேவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாதுரு தேவி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவர் உடல் கருகினார். பின்னர் அவருக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.