எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஓரணியில் சேர வேண்டும்


எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஓரணியில் சேர வேண்டும்
x

நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஓரணியில் சேர வேண்டும் என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் அருகே பண்டாரவாடையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- உத்தர பிரதேசத்தில் போலீசார் முன்பு முன்னாள் எம்.பி. சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இதற்காக உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை கலைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஓரணியில் சேர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story