முகத்துவாரத்தை முழுமையாக தூர்வார வேண்டும்


முகத்துவாரத்தை முழுமையாக தூர்வார வேண்டும்
x

திருமுல்லைவாசல் முகத்துவாரத்தை முழுமையாக தூர்வார வேண்டும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் திருமுல்லைவாசல், தொடுவாய், கூழையார் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தங்களுடைய 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் கட்டுமரம் உள்ளிட்டவைகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து தினமும் காலை, மாலை நேரங்களில் முகத்துவாரம் வழியாக கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் முகத்துவாரம் அருகில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருங்கற்களை கொண்டு தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. இந்த தூண்டில் வளைவு முறையாக அமைக்கப்படாததால் அடிக்கடி முகத்துவாரத்தில் மண்மேடுகள் ஏற்பட்டு முகத்துவாரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அடிக்கடி விசைப்படகுகள் முகத்துவாரத்தை கடக்கும்போது தரைதட்டி படகுகள் சேதம் அடைந்து வருகின்றன. இதுகுறித்து மீனவர்கள் அரசுக்கு தொடர்ந்து முகத்துவாரத்தை தூர்வார வேண்டும் மேலும் தூண்டில் வளைவுகளை மீண்டும் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே அரசு மீனவர்கள் கோரிக்கையை ஏற்று தூண்டில் வளைவை சீரமைத்து முகத்துவாரத்தில் முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story