மறுகால் பாயும் தூவானம் அணை


மறுகால் பாயும் தூவானம் அணை
x

மேகமலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தூவானம் அணை நிரம்பி மறுகால் பாய்கிறது.

தேனி

தேனி மாவட்டத்தில், இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமாக மேகமலை திகழ்கிறது. திரும்பிய திசை எல்லாம் பச்சைப்பசேல் என்று காட்சி அளிக்கும் தேயிலை தோட்டங்கள் நம்மை வரவேற்கும். மலையும், மேகமும் ஒன்றாக காட்சி அளிக்கும். தரையில் தவழ்ந்து செல்லும் மேக கூட்டங்களை தினமும் கண்டு ரசிக்கலாம்.

இதுபோன்ற பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான மேகமலைக்கு, தேனி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதேபோல் கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களாக மேகமலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, அங்குள்ள ஹைவேவிஸ், தூவானம் உள்ளிட்ட அணைகளில் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்த ரம்மியமான காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர். ஓணம் பண்டிகையையொட்டி கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மேகமலைக்கு குவிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story