கடைபோக்கு வடிகால் வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும்


கடைபோக்கு வடிகால் வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும்
x

கடைபோக்கு வடிகால் வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும்

தஞ்சாவூர்

புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் கடைபோக்கு வடிகால் வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடைபோக்கு வடிகால் வாய்க்கால்

மேட்டூர் அணையில் இருந்து அடுத்த மாதம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க இருப்பதால் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் செல்லி குறிச்சி ஏரி நிரம்பி அந்த தண்ணீர் புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் உள்ள கடைபோக்கு வடிகால் வாய்க்கால் வழியாக அதிராம்பட்டினம் எல்லையில் உள்ள குளத்திற்கு செல்கிறது. இந்த வாய்க்கால் கடந்த 2019-2020-ம் ஆண்டு தூர்வாரப்பட்டு அங்கு சிறிய தடுப்பணை கட்டப்பட்டது. இ்ந்த வாய்க்கால் மூலம் அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் பயன்அடைந்து வருகின்றனர்.

வாய்க்கால் முழுவதும் தூர்வார வேண்டும்

தற்போது இந்த வடிகால் வாய்க்கால் முழுவதுமாக தூர்ந்து போய் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. வாய்க்கால் முழுவதும் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இந்த வாய்க்காலில் ஒரு பகுதியில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. ஆனாலும் கடைபோக்கு வடிகால் வாய்க்கால் முழுவதும் தூர்வார வேண்டும். அப்போது தான் அந்த வாய்க்காலில் வருகின்ற தண்ணீரை மற்ற பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே தூர்வாரும் பணியை விரைந்து நிறைவேற்றி தரவேண்டு்ம் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story