கால்வாய்க்குள் தவறி விழுந்த கலவை எந்திர உரிமையாளர் சாவு
பூதப்பாண்டி அருகே கால்வாய்க்குள் தவறி விழுந்த கலவை எந்திர உரிமையாளர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே கால்வாய்க்குள் தவறி விழுந்த கலவை எந்திர உரிமையாளர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
கலவை எந்திர உரிமையாளர்
பூதப்பாண்டி அருகே உள்ள அருமநல்லூர் ஏலப்பறை பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது45). இவர் சிமெண்டு கலவை எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர் வீட்டில் இருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
கால்வாயில் பிணமாக...
இந்தநிலையில் நேற்று காலையில் புளியடி பகுதியில் உள்ள கால்வாய்க்குள் தண்ணீரில் மூழ்கி ஒருவர் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பூதப்பாண்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது இறந்து கிடந்தது ஜானகிராமன் என்பது தெரிய வந்தது. இதுபற்றி அறிந்ததும் ஜானகிராமன் குடும்பத்தினர் விரைந்து வந்து உடலை பார்த்து கதறி அழுதனர். ஜானகிராமன் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜானகிராமன் அந்த வழியாக நடந்து சென்ற ே்பாது கால்வாய்க்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.