பாத்திரக்கடை அதிபர் அடித்துக் கொலை
சேத்துப்பட்டில் பாத்திரக்கடை அதிபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டில் பாத்திரக்கடை அதிபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
செல்போன் அடகு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு போளூர் சாலையில் பாத்திரக்கடை மற்றும் அடகு கடை நடத்தி வந்தவர் ராஜகோபால்.
இவரிடம் வெங்கடாஜலபதி தெருவை சேர்ந்த மூர்த்தி (வயது 21) என்பவர் செல்போன் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் செல்போனை மீட்பதற்காக மூர்த்தி கடைக்கு சென்று, வட்டியும் அசலும் எவ்வளவு ஆகிறது என்று கேட்டுள்ளார்.
அதற்கு ராஜகோபால் செல்போனுக்கு ரசீது எங்கே என்று கேட்டார். அதற்கு அவர் ரசீது இல்லை என்று கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அடித்து கொலை
இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி ராஜகோபாலை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராஜகோபால் சிகிச்சைக்காக சேத்துப்பட்டு உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகோபால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி கொலை வழக்காக மாற்றம் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.