சக்கர நாற்காலியில் வந்து தேசியக்கொடி ஏற்றிய ஊராட்சி தலைவர்


சக்கர நாற்காலியில் வந்து தேசியக்கொடி ஏற்றிய ஊராட்சி தலைவர்
x

சக்கர நாற்காலியில் வந்து ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்றினார

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே மணி கிராமம் ஊராட்சியின் தலைவராக முல்லவேந்தன் பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் காயம் அடைந்த இவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே நேற்று நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பங்கேற்கும் பொருட்டு தன்னுடைய உடல் நிலையும் பொருட்படுத்தாது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் கிராம சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார்.





Next Story