குடிநீர் வீணாகுவதை தடுக்க புது யுக்தியை கையாளும் ஊராட்சி மன்ற தலைவர்


குடிநீர் வீணாகுவதை தடுக்க புது யுக்தியை கையாளும் ஊராட்சி மன்ற தலைவர்
x

குடிநீர் வீணாகுவதை தடுக்க புது யுக்தியை கையாளும் ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன். இவர் கவுல்பாளையம் கிராம ஊராட்சியில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கவும், குடிநீர் வீணாகுவதை தடுக்க ஒரு புது யுக்தியை கையாண்டு வருகிறார். அதன்படி செல்போனில் இயங்கும் ஸ்மார்ட் கன்ட்ரோலர் தொழில் நுட்பத்துடன் கூடிய தனித்தனி சிம் கார்டுகள் பொருத்தப்பட்ட 5 மின் மோட்டார்களை வாங்கி, கிராமத்தில் உள்ள 5 திறந்த வெளி கிணறுகளில் பொருத்தினார். பின்னர் அவர் தனது செல்போன் எண்ணில் இருந்து மோட்டார்களில் பொருத்தப்பட்ட சிம் எண்களுக்கு அழைப்பு விடுத்து, மோட்டார்களை இயக்குகிறார். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரம்பியதுடன் அவரது செல்போன் எண்ணுக்கு தகவல் வந்தவுடன் இருந்த இடத்திலேயே இருந்து மோட்டார்களை இயக்குவதை நிறுத்தி விடுகிறார். இதனால் தண்ணீர் வீணாகுவது தடுக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற ஊழியர்கள் கிராம மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கின்றனர். தமிழகத்தில் முதல் முறையாக செயல்படுத்தப்பட்டு வரும் ஊராட்சி மன்ற தலைவரின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த முறையை மாவட்டத்தில் மற்ற கிராம ஊராட்சிகளிலும் பயன்படுத்தினால் கோடை காலத்தில் தண்ணீர் வீணாகுவது தவிர்க்கப்படும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


Next Story