கால்காளால் மரத்தின் பட்டையை பரண்டிய சிறுத்தை
கால்காளால் மரத்தின் பட்டையை பரண்டிய சிறுத்தை
தளி
உடுமலை வனப்பகுதியில் வனவிலங்கு கணக்கெடுப்பிப்போது மாமிச எச்சங்கள் நகங்களில் படித்திருப்பதை சுத்தம் செய்வதற்காக கால்காளால் மரத்தின் பட்டையை சிறுத்தை பரண்டி இருப்பதை ஆய்வின் போது வனத்துறையினர் கண்டு பிடித்தனர்.
வன விலங்குகள்
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடைகாலம் மற்றும் குளிர் காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகம் வெளிமண்டல பகுதியான கொழுமம், வந்தரவு வனச்சரகங்களில் கடந்த 23 - ந் தேதி கோடைகால கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இங்குள்ள 34 சுற்றுகளில் அமைக்கப்பட்ட 53 நேர்கோட்டு பாதையில் வனப்பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் மூன்று நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் வீதம் மூன்று நாட்களில் 15 கிலோமீட்டர் தூரம் சென்று சுற்றுகளில் காணப்படுகின்ற புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டது.
4-வதுநாள்
4- ம் நாளான நேற்று நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் வனவிலங்குகளின் காலடிகுளம்பினங்கள், பறவைகள், மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் ஆகியவை குறித்து பதிவு செய்யப்பட்டது.
இதில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவிஇயக்குனர் க.கணேஷ்ராம் கலந்து கொண்டு கணக்கெடுப்பு பணியை ஆய்வு செய்தார்.அதைத் தொடர்ந்து கொழுமம் வனச்சரகம் பாப்பம்பட்டி பிரிவு, பெரியம்மாபட்டி சுற்றில் நாகவலசு ஓடை, குதிரையாறு நீர்பிடிப்பு மற்றும் கோம்பைத்துறை சரக பகுதியில் புலி, சிறுத்தை, ஊண்ணிகள் மற்றும் பெரிய தாவர உண்ணிகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது கோம்பைத்துறை பகுதியில் நீர்மருந்து மரத்தில் சிறுத்தையின் நககீரல்களும் தரையில் கால்களால் பரண்டப்பட்ட அடையாளங்கள் காணப்பட்டது.
இந்த அடையாளங்கள் புலி மற்றும் சிறுத்தைகள் உணவுக்காக வேட்டையாடப்படும் இரை விலங்குகளின் மாமிச எச்சங்கள் நகங்களில் படித்திருப்பதை சுத்தம் செய்வதற்காக இடுவதாகும். மேலும் தனது எல்லையினை பிற மாமிச உண்ணிகளுக்கு தெரியப்படுத்தும் குறியீடாகவும் இடுகிறது. இந்த நிகழ்வின் போது கொழுமம் வனச்சரக அலுவலர் மகேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் உடன் இருந்தனர்.