பையை மாற்றி எடுத்துச் சென்ற பயணி


ஒரே மாதிரியாக இருந்ததால் பையை மாற்றி எடுத்துச் சென்ற பயணி. உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

வேலூர்

தன்பாத்தில் இருந்து ஆலப்புழா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆந்திராவை சேர்ந்த பானு கிருஷ்ணன் பிரசாத் (வயது 21) என்பவர் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்தார். அவர் விஜயவாடாவில் இருந்து எர்ணாகுளம் வரை செல்ல முன்பதிவு செய்து இருந்தார். அதே ரெயிலில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி ரெயில் நிலையத்திலிருந்து குமார் பன்ராஜ் என்பவர் பயணம் செய்து காட்பாடி ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இறங்கினார்.

இருவருடைய பயண பைகளும் ஒரே மாதிரி இருந்துள்ளது. இதனால் குமார் பன்ராஜ் இறங்கும்போது தனது பை என்று நினைத்து பானு கிருஷ்ண பிரசாத்தின் பையை எடுத்துக் கொண்டு இறங்கிவிட்டார். இதுகுறித்து பானுகிருஷ்ண பிரசாத் காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் குமார் பன்ராஜும் பை மாறி விட்டதை அறிந்து காட்பாடி ரெயில்வே போலீசாரிடம் அந்த பையை ஒப்படைத்தார். அதில் லேப்டாப் கேமரா மற்றும் துணிமணிகள் இருந்தது.

இது குறித்து காட்பாடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி இருவரிடமும் அவர்களின் பையை ஒப்படைத்தார்.


Next Story