தூத்துக்குடியில் இனிகோநகர் மக்கள் திடீர் சாலை மறியல்


தூத்துக்குடியில் இனிகோநகர் மக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இனிகோநகர் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி இனிகோநகர் பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் இருந்து பீடிஇலை, மஞ்சள் உள்ளிட்டவை படகு மூலம் கடத்தப்படுகிறதா? என்று நேற்று முன்தினம் மாலையில் தென்பாகம் போலீசார் ரோந்து சென்று உள்ளனர். அப்போது, கடற்கரை பகுதியில் நின்ற ஒருவரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இனிகோநகர் பகுதி மக்கள் நேற்று காலையில் தெற்கு பீச் ரோட்டின் நடுவே இரும்பு தடுப்புகளை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அப்போது போலீசார் தாக்கியதை கண்டித்தும், கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மற்ற இளைஞர்களை தொந்தரவு செய்யக்கூாது என்றும் வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story