"தென்மாவட்ட மக்கள் மிகவும் அன்பானவர்கள். 'லியோ' படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்று தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
“தென்மாவட்ட மக்கள் மிகவும் அன்பானவர்கள். ‘லியோ’ படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
"தென்மாவட்ட மக்கள் மிகவும் அன்பானவர்கள். 'லியோ' படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்று தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
பேட்டி
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும், 'தலைவர் 170' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. இந்த படப்படிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது மக்கள் அவரை பார்ப்பதற்காக திரண்டு வந்தனர். ரசிகர்களும் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இந்தநிலையில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை செல்வதற்காக நேற்று தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார். அவரை காண ரசிகர்கள் திரண்டு வந்தனர்.
அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
வெற்றி பெற வாழ்த்துக்கள்
1977-ம் ஆண்டு 'புவனா ஒரு கேள்விக்குறி' படப்பிடிப்புக்காக தென்மாவட்டத்துக்கு வந்தேன். 46 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வந்து உள்ளேன். இங்குள்ள மக்கள் மிகவும் அன்பான மக்கள். அவர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், எல்லோருடனும் புகைப்படம் எடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது.
நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் வருகிற 19-ந் தேதி வெளியாக இருக்கிறது. அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள். லியோ படம் வெற்றி பெற ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். நான் நடித்த 'லால் சலாம்' படம் பொங்கலுக்கு வெளியாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் போலீஸ் பாதுகாப்புடன் விமான நிலையத்துக்குள் அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.