போதை ஊசி வைத்திருந்தவர் கைது
போதை ஊசி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஆன்லைன் லாட்டரி விற்பனை, போதை ஊசி விற்பனையை தடுக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் மாவட்டத்தில் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மச்சுவாடி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசி வைத்திருந்த சின்னதுரையை (வயது 27) கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 80-க்கும் மேற்பட்ட மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story