வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது


வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
x

வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர் பள்ளிகொண்டாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 34).

இவர் சாலையோரம் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பட்டதால் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.

இவர் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார்.

அதனைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் தங்கவேலுவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story