வீட்டு முன்பு நின்ற டெம்போவை கடத்தியவர் கைது


வீட்டு முன்பு நின்ற டெம்போவை கடத்தியவர் கைது
x

வில்லுக்குறி அருகே வீட்டு முன்பு நின்ற டெம்போவை கடத்தியவர் கைது

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

வில்லுக்குறி அருகே உள்ள மேலப்பள்ளம் ரோடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் காட்வின் (வயது30). இவர் பந்தல் அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மினி டெம்போ உள்ளது. அந்த டெம்போவை அவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைப்பது வழக்கம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு காட்வின் வழக்கம் போல் மினிடெம்போவை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது மினிடெம்பாவை காணவில்லை. அதை இரவு யாரே மர்ம நபர் கடத்தி சென்று விட்டார்.

இதுகுறித்து காட்வின் இரணியல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிடெம்போவை தேடி வந்தனர். மேலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மினிடெம்போவை நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை 17-வது தெரு ரகுமத் நகரைச் சேர்ந்த மரிய ஜோசப்சேவியர் (46) என்பவர் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை நாகர்கோவில் தனிப்படை போலீசார் கைது செய்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் கடத்தப்பட்ட டெம்போவும் மீட்கப்பட்டது. பின்னர் மரிய ஜோசப் சேவியரை போலீசார் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவிலில் உள்ள சிறையில் அடைத்தனர்.


Next Story