மாற்றுத்திறனாளியை தாக்கியவர் சிறையில் அடைப்பு


மாற்றுத்திறனாளியை தாக்கியவர் சிறையில் அடைப்பு
x

மாற்றுத்திறனாளியை தாக்கியவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். மாற்றுத்திறனாளியான இவர் வேப்பூர் பஸ் நிலையத்தில் உடல் நிலை சரியில்லாமல் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிமுத்து, ராஜசேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கினார். இதில் ராஜசேகருக்கு காயம் ஏற்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து ராஜசேகர் தன்னை தாக்கிய பழனிமுத்து மீது நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து பழனிமுத்துவை கைது செய்தார். பின்னர் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story