வாலிபரை தாக்கியவர் கைது
திண்டிவனத்தில் வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம்
திண்டிவனம்,
திண்டிவனம் மூகாம்பிகை நகரில் வசித்து வருபவர் மூர்த்தி மகன் அருண் பாண்டி(வயது 23). தனியார் நிறுவன ஊழியர். அதே பகுதியைச் சேர்ந்தவர் ராம் தேவ் என்கிற கணபதி ராம்(48). இவர் தன்னுடைய கார் மற்றும் மோட்டார் சைக்கிளை தனது வீட்டின் அருகே வழியில் நிறுத்தி இருந்தார். இதைபார்த்த அருண்பாண்டி, வாகனங்களை எடுக்குமாறு கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராம்தேவ் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து அருண் பாண்டியை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்தேவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story