தொழிலாளியை தாக்கியவர் கைது
கோவில்பட்டி அருகே தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 52). குச்சி கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கும், தெற்கு திட்டங்குளம் மேல காலனியைச் சேர்ந்த ஆத்தியப்பன் மகன் கூலித்தொழிலாளி நாகராஜ் (45) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கணேசன், பஞ்சாயத்து அலுவலகம் முன்பு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகராஜ்க்கும், கணேசனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த நாகராஜ், கணேசனை கம்பால் சரமாரியாக தாக்கினாராம். இதில் காயமடைந்த கணேசன், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.
Related Tags :
Next Story