மனு கொடுக்க வந்தவர் மயங்கி விழுந்து சாவு


மனு கொடுக்க வந்தவர் மயங்கி விழுந்து சாவு
x

நாங்குநேரி அருகே மனு கொடுக்க வந்தவர் மயங்கி விழுந்து இறந்தார்

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி தாலுகா சிங்கநேரியில் பொதுமக்களிடம் மனு வாங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. அப்போது கீழபுத்தனேரியைச் சேர்ந்த செல்லத்துரை (வயது 67) என்பவர் முதியோர் உதவித்தொகை கேட்டு மனு அளிக்க வந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். முகாமில் இருந்த அதிகாரிகள் அவரை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

செல்லத்துரை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 3 மகன்கள் வெளியூரில் உள்ளனர். தற்போது கீழபுத்தனேரியில் உறவினர் வீட்டில் செல்லத்துரை வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story