டயர் நிறுவனத்தில்ரூ.1½ கோடி மோசடி செய்தவர் கைது


டயர் நிறுவனத்தில்ரூ.1½ கோடி மோசடி செய்தவர் கைது
x

போலியாக விற்பனை நிலையங்களை தொடங்கி மதுரையில் உள்ள டயர் நிறுவனத்தில் ரூ.1½ கோடி மோசடி செய்த நபரை நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

போலியாக விற்பனை நிலையங்களை தொடங்கி மதுரையில் உள்ள டயர் நிறுவனத்தில் ரூ.1½ கோடி மோசடி செய்த நபரை நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ரூ.1½ கோடி மோசடி

நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் அன்பு நகரை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 45). இவர் கார், லாரி, பஸ் போன்ற வாகனங்களின் டயர்களை வாங்கி விற்பனை செய்து வந்தார்.

கடந்த 2019-2020-ம் ஆண்டுகளில் போலியாக 10 விற்பனை நிலையங்களை தொடங்கி, அந்த நிலையங்களின் பெயர்களில் மதுரையில் உள்ள ஒரு டயர் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து டயர்களை வாங்கி விற்பனை செய்துள்ளார்.

அந்த வகையில் மதுரையில் உள்ள டயர் தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய ரூ.1 கோடியே 53 லட்சத்தை சங்கரநாராயணன் கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

கைது- கார் பறிமுதல்

இதுகுறித்து டயர் தயாரிப்பு நிறுவன மேலாளர் ரகு வெங்கடேஷ் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சங்கரநாராயணனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story