கோவிலில் நுழைந்து தேங்காய் புதைத்த நபர்
ஆரல்வாய்மொழி அருகே நள்ளிரவில் கோவிலில் நுழைந்து தேங்காய் புதைத்த நபர்
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே உள்ள சோழபுரத்தில் கண்ணாத்து மயான சுடலை மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஏற்கனவே 2 முறை திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதனால், அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் சம்பவத்தன்று காலையில் நிர்வாகிகள் கோவிலுக்கு சென்றபோது அங்கு பூக்கள் மற்றும் சில பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள், அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தனர்.
அதில், நள்ளிரவு 1.30 மணியளவில் ஒரு நபர் கையில் பையுடன் கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட்டு விட்டு தான் கொண்டு வந்த பொருட்களை குழிதோண்டி புதைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. தொடர்ந்து நிர்வாகிகள் அந்த குழியை தோண்டி பார்த்தனர். அப்போது, அதில் பூ, தேங்காய் ஆகியவை புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கோவில் தலைவர் வீரபுத்திரபிள்ளை ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், புளியன்விளையை சேர்ந்த ஒருவர் கோவிலுக்குள் நுழைந்து குழிதோண்டி சில பொருட்களை புதைத்து வைத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
------
(2 காலம் படம்)