650 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது
திண்டுக்கல் பகுதியில் 650 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்
திண்டுக்கல் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைப்பதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் திண்டுக்கல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்தழகுப்பட்டியில் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் 13 மூட்டைகளில் 650 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வீட்டில் இருந்த அமுல்ராஜ் (வயது 37) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், முத்தழகுப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து, அவற்றை கால்நடை தீவனமாக மாற்றி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story