அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்திய நபர்
அபாய சங்கிலியை இழுத்து ஒருவா் ரெயிலை நிறுத்தினாா்.
ஈரோடு
கோவையில் இருந்து லோக்மானிய திலக் வரை செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் காலை 10.25 மணிஅளவில் ஈரோடு முதலாவது நடைமேடைக்கு வந்து நின்றது. சிறிது நேரத்தில் ரெயில் புறப்பட தயாரானது. மெதுவாக சென்றபோது வாலிபர் ஒருவர் திடீரென அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பந்தப்பட்ட முன்பதிவு பெட்டிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அதில் இருந்த வாலிபர் ஒருவர், உடன் வந்த உறவினர் ரெயிலில் இருந்து இறங்கிவிட்டு மீண்டும் ஏறாததால் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தியதாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து அவருக்கு போலீசார் அறிவுரை வழங்கினார்கள். சுமார் 5 நிமிடங்களுக்கு பிறகு ரெயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story