கோவிலில் திருடிய நபர் பிடிபட்டார்


கோவிலில் திருடிய நபர் பிடிபட்டார்
x

குடியாத்தத்தில் கோவிலில் திருடிய நபர் பிடிபட்டார். அவரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்தனர்.

வேலூர்

குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் புகுந்து அங்கிருந்து பூஜை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளார். இந்த திருட்டு சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது.

இந்தநிலையில் கோவிலில் திருடிய அதே நபர் கோவிலுக்கு அருகே சுற்றி திரிந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்த நபரை பிடித்து அப்பகுதியில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்தனர். பின்னர் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார் அந்த நபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதேப் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் (வயது 24) என்பதும், கோவிலில் பொருட்களை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நித்தியானந்தத்தை கைது செய்தனர்.


Next Story